ஃபெஞ்சல் புயல் அச்சுறுத்தலின்போது நேற்று சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஓடுபாதையில் இறங்க முயன்ற விமானம் தடுமாறியது. உடனே சுதாரித்து கொண்ட விமானி விமானத்தை தரையிறக்கம் மேலே எழுப்பி பறக்க வைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.