கணவன் மனைவி உறவில் உங்களுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டிய மிக முக்கிய சில ரகசியங்கள் உள்ளன.
● உங்கள் துணை எவ்வளவு பலவீனமானவர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள் யாராவது உங்களுக்கு அல்லது அவர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்தலாம்.
● உங்கள் துணையுடன் நீங்கள் எவ்வளவு சண்டையிடுகிறீர்கள் என்பதை பிறரிடம் சொல்லாதீர்கள் உங்களுக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நீங்கள் நல்ல துணைவர்களாக தெரிய வேண்டும்.
● உங்கள் கணவரிடமிருந்து செலவுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று ஒரு சிறந்த நண்பரிடம் கூட சொல்லாதீர்கள் அவர்கள் கேட்டால் அவர் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக கொடுக்கிறார் என்று சொல்லுங்கள்.
● உங்கள் மனைவி படுக்கையில் எவ்வளவு ஒத்துழைப்பவர் என்று நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லாதீர்கள் அது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே உள்ள ரகசியம்.
● உங்கள் அம்மாவிடம் அவர் அல்லது அவள் திருமண வாழ்க்கையில் நடந்து கொள்ளும் விதத்தை ஒரு போதும் சொல்லாதீர்கள் பொறாமை கொண்ட மாமியாராக இருந்தால் அதன் விளைவு உங்களுக்கு கடுமையாக இருக்கும்.
● பெண்களே உங்களுடைய ஒரு தோழிக்கு உங்கள் கணவன் மீது ஒரு கண் இருக்கலாம் அதனால் அவர் உங்களை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்றோ எவ்வளவு நல்லவர் என்றோ படுக்கையில் வல்லவர் என்றோ உங்களுக்குள் இருக்கும் அண்ணியோண்ணியம் பற்றியோ வாய் திறக்காதீர்கள்.
● உங்கள் கணவருடன் நீங்கள் எத்தனை முறை சண்டையிடுகிறீர்கள் என்பதை அறிய உங்கள் பெற்றோர் உடன் பிறந்தவர் கூட தகுதியற்றவர் அவர்களில் பெரும்பாலோர் அதை உபதேசமாகப் பயன்படுத்துவார்கள் அது உங்கள் இணையருக்கு பிடிக்காமல் போகலாம்.
● குழந்தைகளிடம் அவர்களின் அப்பாவோ, அம்மாவோ கெட்டவர் என்று சொல்லாதீர்கள் அது அவர்களுக்குள் வெறுப்பை வளர்க்கலாம் இதை பெரும்பாலான குடும்பங்களில் நான் பார்க்கிறேன்.
● உங்கள் துணையின் கடந்த கால தவறுகளை யாரிடமும் சொல்லாதீர்கள் அது உங்கள் திருமணத்திற்கு மிக மிக ஆபத்தானது.
எந்த ஒரு குடும்ப விடயத்தையும் பகிரங்கப்படுத்துவதை விட ரகசியமாக வைத்திருப்பது சிறந்தது உங்கள் உறவில் வஞ்சகர் யார் என்று உங்களுக்குத் தெரியாது.