'மொய்' என்ற சொல் 'மொய்' என்ற வினையடிப் பிறந்த பெயர்ச்சொல் ஆகும்.
'எறும்புகள் மொய்க்கின்றன' என்ற வாக்கியத்தில் 'எறும்புகள் கூட்டமாகக் கூடி உண்ணும் செயலைச் செய்கின்றன'என்று பொருள் தருகிறது.
அதுபோலவே திருமணங்களில் 'மொய்' என்பது உறவும், நட்பும் ஒன்றுகூடி மணமக்களுக்குப் பணம் கொடுத்து, அவர்கள் தனி இல்வாழ்க்கை நடத்துவதற்காக ஊக்கப்படுத்தும் செயல் ஆகும். பிற்காலத்தில் இதனைப் பெற்றோர்கள் பெற்று அதன் பயனையே மாற்றிவிட்டார்கள்.
-படித்தது