Type Here to Get Search Results !

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஏழு விஷயங்களை மட்டும் கடைபிடியுங்கள்



 உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் சவால் என்றே கூறலாம்.

 நவீனத்தின் ஒரு விளைவாக, இன்று உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம்.

 மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. இனி வரும் காலத்தில் உடல்நலனை சரியாக பேண வேண்டுமெனில் அனைத்து வயதினரும் தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

 அதிலும் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துகின்றனர்.

உடல் எடையை அதிகரிப்பது போல உடல் எடையைக் குறைப்பதும் எளிதே. உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றம், உடலை முடிந்தவரை இயக்கத்தில் வைத்திருந்தால் போதும். ஒரு சில மாதங்களில் உடல் எடை குறைந்துவிடும்.

 ஒரே மாதத்தில் முழுவதுமாக டயட்டில் இருந்து அதிகமாக உடற்பயிற்சி செய்வது ஒருபோதும் சரியல்ல. மாறாக, சீரான வேகத்தில் படிப்படியாக உடற்பயிற்சி அளவை அதிகரிக்க வேண்டும். அதேபோல உடனடி மாற்றங்களை எதிர்ப்பார்ப்பதும் தவறு. உடலில் நல்ல மாற்றங்கள் தெரிய குறைந்தது 3 மாதங்கள் வரை ஆகலாம்.

உடல் எடையைக் குறைக்கும் எளிய 7 வழிகள்!

8-8 உணவு வேண்டாம்

பல்வேறு துறைகளில் இப்போதெல்லாம் 24 மணி நேர வேலை என்பது சாதாரணமாகிவிட்டது. இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் நேரம், தூங்கும் நேரத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 இதில் உணவு முறையில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாப்பிடுவதைத் தவிருங்கள். இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டு முடித்துவிடுங்கள். அதுபோல காலை உணவை 8 மணிக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

மேலும் இரவில் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

காலை உணவைத் தவிர்க்க வேண்டாம்

சிலர் அலுவலகத்திற்கு கிளம்பும் பரபரப்பில் காலை உணவையே தவிர்த்துவிடுவார்கள். சிலர் காலையில் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்ற தவறான கண்ணோட்டத்தில் உள்ளார்கள். இந்த இரண்டுமே தவறு. காலை உணவை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் அதிக இடைவெளி இருப்பதால் கண்டிப்பாக காலை உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்ப்பது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

 நீர் ஆகாரங்கள்

உடல் எடையைக் குறைக்க முதலில் தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். அடுத்ததாக உணவுகளை நீர் ஆகாரங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு அதிகம் அருந்த வேண்டும்.

அதேபோல நாம் எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் கலோரிக்கும் தொடர்பு இல்லை. குறைவாக எடுத்துக்கொள்ளும் சில உணவுகள் அதிக கலோரியைக் கொடுக்கும்.

 எனவே, குறைவான கலோரி கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

 உடற்பயிற்சி

ஒவ்வொருவரின் உடல் திறனுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிலர் குறைந்த திறன் கொண்ட பயிற்சிகளை அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம். சிலர் அதிக திறன் கொண்ட பயிற்சிகளை குறைந்த நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

 உதாரணமாக நடத்தல், ஓடுதல் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால், எந்தவொரு உடற்பயிற்சியையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். மருத்துவரின் அறிவுரையுடன் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

 சூப் குடியுங்கள்

உடல் எடையைக் குறைப்பதில் சூப் முக்கிய பங்காற்றுகிறது. காய்கறிகள் கொண்டு தயாரான சூப் மிகவும் குறைந்த கலோரி கொண்டது. உடலுக்கு அதிக எனர்ஜி தரக்கூடியது. எனவே, தினமும் ஒரு சூப் குடிப்பதை வழக்கமாகக்கொள்ளுங்கள்.

 தூக்கம்

சிலர் உணவுக் கட்டுப்பாடுடன் உடற்பயிற்சியும் செய்வார்கள், ஆனாலும் உடல் எடை குறையவில்லை எனில் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.

 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். தூங்கும்போது உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உணவுகள் எளிதில் செரிக்கின்றன. மேலும் போன் சரியாக வேலை செய்யவில்லை என்றால் 'ரீ செட்' செய்வது போல உடலில் உள்ள ஹார்மோன்கள் 'ரீ-செட்' ஆக வேண்டுமெனில் ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.

 முழு தானியங்கள்வேகவைத்த முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை அரிசி உணவுகளைத் தவிர்த்து பயறு வகைகள், கம்பு, சோளம், கோதுமை உணவுகளை சாப்பிட வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்து நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

Top Post Ad

Below Post Ad