முதலில் இரவு தூக்கத்தை முறைப்படுத்துங்கள் .
உதாரணமாக இரவு 10 மணிக்கு படுத்து காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். பத்து மணிக்கு எனக்கு தூக்கம் வரவில்லை என்பவர்கள் பகலில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்து வந்தால்
நிச்சயமாக தூக்கம் வரும்;
தவிர, காலை 5 முதல் 7 மணி வரை வேறு யாருடைய குறுக்கீடு இல்லாமல் நீங்கள் உங்களுக்கு அந்த நேரத்தை பயன்படுத்த முடியும்.
உங்களை பற்றி நீங்கள் மிகவும் குறைவாக / மட்டரகமாக எடை போட்டிருந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும். Positive affirmation வாக்கியங்கள் இதற்கு உதவும்.
இதுவரை உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் உங்கள் திறமையை பிறர் பாராட்டி மகிந்தவற்றை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து கொள்ள வேண்டும்; யோசித்து பார்த்தால் அப்படி ஒரு சம்பவம் இருப்பது கண்டிப்பாக தெரிய வரும்.
உங்கள் உள்மனம் அவ்வப்போது உங்களிடம் பேசும்; தனக்கு தானே அது சொல்லும் விஷயங்களை பற்றி எந்தவிதமான கடுமையான வாக்குவாதமும் செய்ய கூடாது. அது சொல்வதில் இருக்கும் நல்லது என்ன என்று பார்க்க வேண்டும்
நான் ஏன் இதை செய்தேன்; நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யாருக்கும் , எப்போதும் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம். அது தேவை இல்லை. ஏனெனில் உங்களை நன்கு தெரிந்தவர்களுக்கு அது தேவைப்படாது; எப்போதும் குறை சொல்பவர்களுக்கு உங்கள் விளக்கம் பயன்படாது.
வாழ்க்கையில் எது எது முக்கியம் ? ஏன் முக்கியம் ? என்பதை பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தி பாருங்கள். உங்கள் பழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.
நீங்கள் உறுதியாக பற்றி கொள்ள வேண்டிய அவசியமான பழக்கங்களை உமது அன்றாட நடைமுறை செயல்களுடன் கோர்த்து விட்டு விடுங்கள். மாற்றங்கள் ஆட்டமாட்டிக் ஆக நடைபெறும்.
ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை பின் தொடர்ந்து செல்வதை விட்டுவிட்டு முக்கியமான ஒரே ஒரு விஷயம் மட்டும் எப்போதும் உங்கள் மனதை ஆக்கிரமிப்பு செய்திருக்க வேண்டும்.
நீங்கள் செய்த தவறுகளை/ குற்றங்களை/பாவங்களை தூக்கி குப்பையில் போட்டு தலை முழுகிவிட்டு உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள்.
To do List எழுதும் பழக்கம் மிகவும் உதவிகரமானது. நிச்சயம் தேவை. முதல் நாள் இரவே நாளை என்ன செய்ய வேண்டும் என்று எழுதி வைத்து கொண்டு, மறுநாள் அதை தவறாமல் செய்து விட வேண்டும்.
அந்த லிஸ்ட்டில் குறிக்கப்பட்டவை எந்த அளவுக்கு நிறைவேறியது என்பதையும் குறித்து வைத்து கொண்டால் follow up செய்ய முடியும்.
சுய கட்டுப்பாடு குறிக்கோள் இல்லாதவர்களுக்கு கிடையாது; வராது.
உங்கள் குறிக்கோளை எட்டி பிடிக்க மாதாந்திர செயல் திட்டம்என்ன? ஓராண்டு கால செயல் திட்டம்என்ன? மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகால செயல் திட்டம் என்ன? என்பவற்றை ஒரு டைரியில் தனித்தனியே எழுதி வைத்து கொள்ள வேண்டும்;
அவ்வப்போது புரட்டி பார்த்து பயன்படுத்தி வந்தால் பலன் உண்டு; இதனால் மனக் கட்டுப்பாடு இல்லாமல் நேரத்தை வீணாக்குவதை தடுக்க முடியும்.
முக்கியமான செயல்கள் (task) செய்து முடிக்கும் போது தனக்கு தானே பரிசு அளித்து கொள்வதும், செய்ய தவறும் போது சிறு சிறு தண்டனை கொடுத்து கொள்வதும் காலப்போக்கில் பெரும் நன்மைகள் தரும் பழக்கங்கள் ஆகும்