நான்-ஸ்டிக் பாத்திரங்களை டிஷ் வாஸ் லிக்விடால் கழுவித் துடைத்துவிட்டு பயன்படுத்தவும். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பின்பும் கழுவிய பின்பு மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது டிஷ்யூ கொண்டு துடைத்து வையுங்கள்.
நான் ஸ்டிக் பாத்திரம் சூடாக இருக்கும் போதே தண்ணீரில் கழுவக்கூடாது.
மெட்டல் கரண்டி, கத்தி மற்றும் கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது .
பொதுவாக நான்-ஸ்டிக் தவாவில் குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தலாம். வடை, பூரி போன்றவற்றை பொறிக்க இந்த பாத்திரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
சமைக்கும் போது நான்-ஸ்டிக் பாத்திரங்களை சிம் அல்லது மீடியம் லெவலில் வைத்து சமைக்கவும். அதிகப்படியான தீயும் அதன் மேல் இருக்கும் பூச்சை பாதிக்கும். அதேபோல் தக்காளி மற்றும் லெமன் போன்ற அமில தன்மை நிறைந்த உணவுகளை சமைப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். இவை நான்-ஸ்டிக் தவாவில் உள்ள மேற்பூச்சுகளை அரிக்கக் கூடும்.
நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்க வேண்டும். கூர்மையான விளிம்புகள் கொண்ட பாத்திரங்களுக்கு இடையில் வைக்கக் கூடாது. சமையலறையில் அதை தனி இடங்களில் வையுங்கள். இதனால் மேற்பூச்சில் கீறல் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படும்.
குறிப்பிடத்தக்க கீறல்கள் அதிகம் உள்ள கடாய், தவாக்களை கட்டாயம் தவிர்க்க வோண்டும். காரணம் பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (PFOA) எனப்படும் ரசாயனத்தைக் கொண்டே டெஃப்ளான் நான் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, கீறல்கள் தெளிவாகத் தெரிந்தால், டெஃப்ளான் மேற்பரப்பு சேதமடைந்திருப்பதன் அறிகுறியாகும். மேலும் ரசாயனங்கள் சமைக்கும் உணவில் கலந்து நச்சுத்தன்மை அடையலாம்.
நான் ஸ்டிக் பாத்திரங்கள்' கருமை நிறத்துக்கு மாறுவது என்பது, அதன் நான்-ஸ்டிக் பூச்சு(Coating) சேதமடைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.
மேலும் அதன் துகள்கள், உணவில் கலந்து வயிற்றில் அசவுகரியத்தை உண்டாக்கும். வாங்கி 3-5 வருடங்களுக்குப் பிறகு நான்-ஸ்டிக் பாத்திரங்களை மாற்றுவது மிகவும் நல்லது.