கோபம் என்பது நாம் மற்றவருக்கு கொடுக்கும் தண்டனை மட்டும் அல்ல நாம் நமக்கும் மனதளவிலும் உடல் அளவிலும் கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
கோபத்தோடு எழுந்தவன்; நஷ்டத்தோடு உட்காருவான்.
அடுத்தவர் செய்த தவறுக்காக நாம் ஏன் நம்மை காயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*நமக்கு கோபத்தால் என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படுகிறது?*
நமக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்துக்கொண்டோமேயானால் நம் சுயநலத்திற்காகவாது நாம் கோவத்தை குறைத்து கொள்வோம்.
1.கோபம் அறிவை பாதிக்கக் கூடியது
2.கோபம் உடலை பாதிக்கக் கூடியது
3.கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது.
*கோபம் ஏற்படுத்தும் உடல் அளவிலான பாதிப்புகள் :*
தலைவலி:
எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும்.
*மன அழுத்தம்: அதிகமாக கோபம் வருவதால், மன அழுத்தம் அதிகமாகி அதன் காரணமாக நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வரும்.*
*தூக்கமின்மை:*
கோபம் வரும் போது ஹார்மோன்கள் சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் சரியான தூக்கமின்மை
*கோபம் ஏற்படுத்தும் மற்ற பாதிப்புகள்:*
கோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கோபம் கொண்டவரையும் பாதிக்கும், மறுதரப்பினரையும் பாதிக்கும்.
கோபம் மட்டும் வெளிப்படக்கூடிய எந்த ஒரு செயலாலும் பலன் ஏற்படப்போவதில்லை.
இதனால்,
சமூக நல்லிணக்கம் சீர்கெடுகிறது.
*குடும்ப உறவு சீர்குலைகிறது.*
நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது.
கோபப்படுகின்றவர்கள் தங்களை சுற்றிலும் எதிர்ப்புக் கோட்டைகளை உருவாக்கி கொள்கிறார்கள். இதனால் உடன் இருப்பவர்கள் அவர்களுடன் இயல்பாக பழக அச்சம் கொள்வர்.
*கோபத்தை குறைக்க சில வழிகள்:*
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
*கோபத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி
1.தியானம்
2.மூச்சு பயிற்சி
3.யோகா.