Type Here to Get Search Results !

சுரைக்காய்க்கு உப்பில்லை இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா


யாராவது இருவர் பேசிக்கொண்டிருக்கும் போது புதிதாக அங்கு வரும் நபர் அவர்கள் பேச்சு புரியாது "அண்ணே என்ன சொன்னாரு" ன்னு கேட்டால்
"ஓ...அதுவா சுரைக்காய்க்கு உப்பில்லையின்னு சொன்னார்ப்பா" ன்னு நக்கலாக சொல்வார்கள் .
அது உண்மையான வார்த்தை தான்.
ஆமாம் உண்மையிலேயே சுரைக்காய்க்கு உப்பு இல்லைங்க.

உப்புநீர் உள்ளவர்கள் மற்றும் கை கால் வீக்கம் உள்ளவர்கள் சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் உப்பு நீர் குறைந்து கை கால் வீக்கம் வற்றிவிடும்.

பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது உப்பு நீர் அதிகமாகி கால்கள் வீக்கமாகும்.
அப்போது தாராளமாக சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள கால் வீக்கம் வடியும்.

சிறுநீரகத்தை நன்கு இயங்க வைக்கும் ஆற்றல் கொண்டது சுரைக்காய். பித்த கோளாறையும் குணமாக்கும்.

நம்ம முன்னோர் "சுரைக்காய்க்கு உப்பில்லை" என்று அதன் மருத்துவ குணத்தைக் குறித்து சொன்னதை தவறாக புரிந்து கொண்டு அதை மற்றவர்களை கிண்டலடிக்கும் வார்த்தையாக மாற்றியது நம் அறியாமையே ..!!!
இனி யாராவது உங்களிடம் "சுரைக்காய்க்கு உப்பில்லை" என்று நக்கலாக சொன்னால் நல்ல மருத்துவக் குறிப்பு கொடுத்ததுக்கு நன்றி ன்னு சொல்லி அவர்கள் அறியாமையை சுட்டிக்காட்டுங்கள்.

Top Post Ad

Below Post Ad