*Aadhaar Card Update Before March 14...
*இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையை மார்ச் 14ம் தேதிக்கு முன்னதாக புதுப்பிக்க வேண்டும்...
*அதிலும் 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்...
*இலவசமாக அப்டேட் செய்ய மார்ச் 14 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது...
*ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் அப்டேட் செய்யவில்லை என்றால், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்...
*ஆதார் அட்டை எனப்படும் ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் அதிகமாகிவிட்ட நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
*அதன்படி பத்தாண்டுகள் ஆன ஆதார் அட்டையை அப்டேட் செய்துக் கொள்ள வேண்டும்...
*ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்களில் திருத்தம் ஏதேனும் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிடுங்கள்...
*இல்லாவிட்டால் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இலவசமாக மார்ச் 14ம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்...
*ஏதேனும் காரணத்தால், மார்ச் 14 வரை அப்டேட் செய்யாவிட்டால் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டியிருக்கும்...
*முதலில் ஆதார் பதிவு செய்தபோது 5 வயதுக்கு குறைவாக இருந்தவர்கள் 5 வயதான பிறகு ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும்...
*அதேபோல, 5 வயது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 15 வயதான பிறகு பயோமெட்ரிக்ஸ் தகவல்களை ஆதாரில் சேர்க்க வேண்டும்...
*15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வருடத்திற்கு ஒருமுறை பயோமெட்ரிக் தரவைப் புதுப்பிக்க வேண்டும்...
*ஆதார் அட்டையில் தகவல்களை புதுப்பிக்க, uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும்...
*புதுப்பிக்க விரும்பும் தரவுப் புலத்தைத் தேர்ந்தெடுத்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்