கொழுப்பு என்றால் என்ன?
கொழுப்பு என்றால் என்ன?
கொழுப்பு என்பது மெழுகு போன்ற பொருள். இது குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் (LDL) மற்றும் உயர் அடர்த்தி கொழுப்பு புரதம் (HDL) என இரண்டு வகைகள் உள்ளன.
இரத்த ஓட்டத்தில் (எல்டிஎல் ) அதிகமாக இருந்தால் அது இரத்த நாளங்களில் உருவாகி பிளேக் எனப்படும் கொழுப்பு படிவுகளை உருவாக்குகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட மூல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால் உடலில் மொத்த எல்டிஎல் கொழுப்பு அளவுகள் குறைவாக இருக்க வேண்டும். (ஹெச்டிஎல்) நல்ல கொழுப்பு என்பது இரத்தத்தில் இருந்தால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.
இந்த இரண்டு கொழுப்புகளின் அளவையும் அளவிட பரிசோதனைகள் உண்டு. மேலும் இதய நோய் அபாயத்தை உயர்த்தக்கூடிய ஹெச்டிஎல் அல்லாத கொழுப்புகளின் அளவையும் தெரிந்துகொள்ள முடியும்.
கொழுப்பு அளவு மற்றும் வயது
கொழுப்பு அளவு மற்றும் வயது
கொழுப்பு அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நாளடைவில் ஆபத்தான முறையில் உயர்வதை தடுக்க உதவும். கொழுப்பு அளவு அதிகமாக இருக்கும் போது அதற்கு சிகிச்சை அளிப்பது சவாலானதாக இருக்கும்.
20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் குறைந்தது 4-6 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொழுப்பு அளவை பரிந்துரைக்க வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகிறது.
குழந்தைகள் 9-11 வயதில் ஒரு கொழுப்பு பரிசோதனையும் 17-21 வயதில் மற்றொரு பரிசோதனையும் செய்ய வேண்டும். அதே நேரம் அதிக கொழுப்புக்கான ஆபத்து காரணிகளை கொண்ட குழந்தைகளுக்கு அடிக்கடி சோதனை தேவைப்படலாம்.
கொழுப்பு அளவில் ஆண்களுக்கு பெண்களை விட அதிக அளவுகள் இருக்கும். ஆணின் கொழுப்பு அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. மாதவிடாய் நின்ற பிறகு பெண்ணின் கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. கொழுப்பு டெசிலிட்டருக்கு மில்லிகிராமில் அளவிடப்படுகிறது.
மொத்த கொழுப்பின் அளவு வயது வாரியாக எவ்வளவு இருக்க வேண்டும்?
மொத்த கொழுப்பின் அளவு வயது வாரியாக எவ்வளவு இருக்க வேண்டும்?
19 வயதை விட குறைவான ஆண்களுக்கு இருக்க வேண்டிய கொழுப்பின் அளவு
சரியான அளவு – 170 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 170 -199 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 200 mg/dL மற்றும் அதற்கு மேல்
20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இருக்க வேண்டிய கொழுப்பின் அளவு
சரியான அளவு – 125- 200 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 200 -239 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 239 mg/dL மற்றும் அதற்கு மேல்
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருக்க வேண்டிய கொழுப்பின் அளவு
சரியான அளவு – 170 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 170-199 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 200 mg/dL மற்றும் அதற்கு மேல்
20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் எனில்
சரியான அளவு – 125-200 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 200-239 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 239 mg/dL மற்றும் அதற்கு மேல்
எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவு வயது வாரியாக
எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவு வயது வாரியாக
19 வயதை விட குறைவான ஆண்களுக்கு இருக்க வேண்டிய கொழுப்பின் அளவு
சரியான அளவு- 110 mg/dL
பார்டர் லைன் – 110-129 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 130 mg/dL க்கு மேல்
20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு இருக்க வேண்டிய கொழுப்பின் அளவு
சரியான அளவு – 100 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 130 -159 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 160-189 mg/dL மற்றும் அதற்கு மேல்
19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருக்க வேண்டிய கொழுப்பின் அளவு
சரியான அளவு – 110 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 110-129 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 130 mg/dL மற்றும் அதற்கு மேல்
20 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் எனில்
சரியான அளவு – 100 mg/dL குறைவாக இருக்க வேண்டும்
பார்டர் லைன் – 130-159 mg/dL
கொழுப்பின் அளவு அதிகம் – 160-189 mg/dL மற்றும் அதற்கு மேல்
கொழுப்பு பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?
கொழுப்பு பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?
பொதுவாக அறிகுறிகள் வெளிப்படுத்தாது. அதனால் தான் கொழுப்பு அளவை பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்று சொல்லப்படுகிறது. கொழுப்பு அறிகுறிகள் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தம் போன்ற நிலைமைகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். இது சோர்வு, மார்பு வலி மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்தும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்கள் ஒவ்வொரு நான்கு முதல் ஆறு வருடங்களுக்கு தங்கள் கொழுப்பு அளவை பரிசோதிக்க வேண்டும்.
கொழுப்பு அடிக்கடி சரிபார்ப்பதன் மூலம் ஆபத்து காரணிகள் தீர்மானிக்கப்படுகின்றன. அதிக கொழுப்பு, இதய நோய், நீரிழிவு அல்லது உடல் பருமன் வரலாறு உள்ளவர்கள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். வயதானவர்கள் எனில் ஆண்டுதோறும் பரிசோதிக்கப்படலாம்.