Type Here to Get Search Results !

வடக்கே தலை வைத்து தூங்கலாமா? அறிவியல் பூர்வமான விளக்கங்கள்




நாம் வீட்டில் தொலைகாட்சி பெட்டி திரைக்கு அருகில் செல்லும் போது நாம் உடலில் உள்ள ரோமங்கள் இழுக்கும்.அதற்க்கு காரணம் அங்கே தொலைக்காட்சியில் மின் கந்தம் இருகிறது . நம்மிடம் ஜீவகாந்தம் இருகிறது.அதனால் ஒன்றை ஒன்று இழுக்கிறது.இதன் முலம் என்ன தெரிகிறது என்றால் நாம் உடலில் காந்த ஆற்றல் என்று ஒன்று உள்ளது என்பதை அறியலாம்.

காந்த ஆற்றல் மனிதர்களுக்கு இடுப்புக்கு மேல் பகுதி வடதுருவமாகவும், இடுப்புக்கு கீழ் பகுதி தென்துருவமாகவும் செயல்பட்டுவருகிறது .நாம் ஜெனனம் ஆவதும் கூட காந்தவிலகல் தத்துவத்தால் தான் . அதாவது ஒரு தாய் வயற்றில் குழந்தை உருவாகும் போது தாயின் இடுப்புக்கு மேல் பகுதி வடக்காகவும் கீழ் பகுதி தெற்காகவும் செயல்படும்.ஆனால் குழந்தைக்கு இடுப்புக்குமேல் பகுதி தெற்காகவும் , கீழ் பகுதி வடக்காகவும், மாறி இருக்கும் குழந்தையின் ஜெனன காலம் வரை அப்படியே இருக்கும் , குழந்தைக்கு எப்பொழுது இடுப்புக்கு மேல் பகுதி வடக்காக மாறுகிறததோ, அப்போது தாயின் வடக்கு பகுதியும் குழந்தையின் வடக்கு பகுதியும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் அப்போது குழந்தையின் தலை திரும்பி கீழ் நோக்கி தள்ளும் அப்போது தான் குழந்தை வெளிய ஜெனனம் ஆகும் .இதுஎல்லாம் நாம் உடலில் உள்ள காந்த சக்தியால் தான் நிகழ்கிறது.

நாம் தலை பகுதி வடதுருவமாக செயல்படுவதால் நாம் வடக்கே தலை வைத்துபடுப்பதால் பூமியின் வடதுருவமும் நாம் உடலில் உள்ள வடதுருவமும் ஒன்றை ஒன்று எதிர்க்கும் .அதனால் ரத்தஓட்டம் தலை பகுதிக்கு அதிகமாக இழுக்கும் .அதனால் நமக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது மேலும் மூளை பகுதி பாதித்து மன குழப்பங்கள் அதிகமாகும் .

தெற்கே தலை வைத்து குறைந்த நேரம் தூங்கினால் கூட நல்ல நிம்மதியான தூக்கம் வரும் .
Tags

Top Post Ad

Below Post Ad