தமிழக அரசு சார்பில் ஒரு கோடிக்கும மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தப்பட்டு வருகிறது. திமுக அரசு ஆட்சியில் இருக்கும் வரை இந்த பணம் செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும். தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.