Type Here to Get Search Results !

ஆன்லைன் வணிக பரிவர்த்தனை: ரூ.2 ஆயிரத்திற்கு மேல் வருகிறது கட்டணம்.




வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் செய்தால்,கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், இது வணிக ரீதியிலான பரிவர்த்தனைக்கு மட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. மேலும் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் செய்தால், கட்டணம் செலுத்த வேண்டும்.

 இது வணிக ரீதியிலான பரிவர்த்தனைக்கு மட்டும் பொருந்தும் என என்பிசிஐ (தேசிய கொடுப்பனவு கழகம்) அறிவித்துள்ளது.

அதன்படி, சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால், 1.1 சதவீதம் கட்டணமும், அரசு நிறுவனங்கள் மற்றும் ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணமும்.

 பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad