Type Here to Get Search Results !

வங்கிகளுக்கு 21 நாள் விடுமுறை?

 
வங்கிகளுக்கு இந்த மாதத்தில் 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்டோபர் மாதம் பண்டிகைகள் நிறைந்த மாதம் என்பதால், 21 நாட்கள் விடுமுறை என, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:nsmimg1006076nsmimg வங்கிகளுக்கு விடுமுறை என்பது, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தேசிய விடுமுறை தினம் மட்டுமே, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.தமிழகத்தில், இந்த மாதத்தில், 4ல் சரஸ்வதி பூஜை; 5ல் விஜயதசமி; 24ல் தீபாவளி என, மூன்று நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு பொது விடுமுறை. இது தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வழக்கம் போல வங்கிகளுக்கு விடுமுறை.நடப்பு ஆண்டில் அக்., 2ல் ஞாயிறு அன்று வந்ததால் தேசிய விடுமுறை இல்லை. தமிழகத்தில் அக்டோபரில் மொத்தம் 10 நாட்கள் மட்டுமே, வங்கிகளுக்கு விடுமுறை. இதில், பொது விடுமுறை என்பது மூன்று நாட்கள்தான். எனவே, சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Top Post Ad

Below Post Ad