செப்டம்பர் 13 செவ்வாய், சந்திரன் இன்று முழுவதும் மேஷத்தில் சஞ்சரிப்பார். இங்கு சந்திரனும் கேதுவும் சேர்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். மனதில் குழப்ப நிலை ஏற்படும். ஆனால் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். இன்று சம்பாத்தியத்துடன் செலவுகளும் அதிகமாக இருக்கும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் இன்றைய ராசிபலன் - Aries
மேஷ ராசிக்கு இன்று சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை காரணமாக வெற்றி உங்களுக்கு கிடைக்கும். சமூக தொடர்பு அதிகரிக்கும் மற்றும் உங்களின் செயல்பாட்டால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். சில பெரிய முதலீடுகளைச் செய்வதற்கும் நல்ல நேரம். குழந்தைகள் வகையில் ஒருவித டென்ஷன் இருக்கும். கோபம் அல்லது ஆக்ரோஷத்தை விட்டு பொறுமை மற்றும் நிதானத்துடன் பிரச்சினையை தீர்க்க முடியும். வெளியாட்களின் குறுக்கீடுகளால் தனிப்பட்ட பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.
புரட்டாசி மாதம் 2022 கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் : இந்த தவறை மட்டும் செய்து விட வேண்டாம்
ரிஷபம் இன்றைய ராசிபலன் - Taurus
ரிஷபம் ராசிக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சில முக்கியமான பயணங்கள் லாபகரமான முடியும். வீடு, கடை, அலுவலகம் போன்றவற்றைப் பழுதுபார்த்து மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களும் உருவாக்குவீர்கள். சகோதரர்களுடனான உறவை எந்த வகையிலும் கெடுக்காமல் கவனமாக இருங்கள்.
நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள். தவறான செயல்களில் அதிக பணம் செலவழிக்க வாய்ப்பு உள்ளது. இன்று தொழில் செய்யும் இடத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
இந்த ராசி ஆண்களை திருமணம் செய்தால் கொடுத்து வைத்த மனைவி நீங்கள் தான்!
மிதுனம் இன்றைய ராசிபலன் - Gemini
மிதுன ராசியினர் உங்கள் வேலையை நிம்மதியாகச் செய்தால் வெற்றி கிடைக்கும். மாறிவரும் சூழலின் காரணமாக உருவாக்கப்பட்ட புதிய கொள்கைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நெருங்கிய உறவினர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். தொழில் திட்டங்களைத் தொடங்க சில முயற்சிகள் எடுக்கலாம். பணியிடத்தில் சிறிய விஷயங்களை கவனத்துடன் செய்து முடிக்கவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும்.
வார ராசிபலன் 12 முதல் 18 செப்டம்பர் 2022 வரை : அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
கடகம் இன்றைய ராசிபலன் - Cancer
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும்.
குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக் கொள்ளவும் காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று கால தாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும்.
மகாளய பட்சம் - 15 நாள் திதிகளில் தர்ப்பணம், சிராத்தம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
சிம்மம் இன்றைய ராசிபலன் - Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். அரசு துறையில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.
வழக்கு விசயங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Mahalaya Amavasya 2022: மகாளயபட்சம் நாளை ஆரம்பம் - மகாளய அமாவாசை எப்போது, அதன் சிறப்பு தெரியுமா?
கன்னி இன்றைய ராசிபலன் - Virgo
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் ஏற்றம் கிடைக்கும் நல்ல நாளாகும். தன வரவுக்கு வழி உண்டு.
நீண்ட நாள் எதிர் பார்த்து இருந்த பணம் வந்து சேரும். சுபச் செலவுகள் கை மீறி செல்லும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது. சிரமம் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தருவதாக அமையும்.
இந்த 7 ராசிகளில் ஒருவரை திருமணம் செய்தால் நீங்கள் பாக்கியம் செய்தவர் தான்
துலாம் இன்றைய ராசிபலன் - Libra
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல நிகழ்வுகள் உண்டு.
கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் சுமுகமான உறவு நிலை நீடிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் அவைகளில் வெற்றி காண்பீர்கள்.
புரட்டாசி மாதத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் ஏன் தவிர்க்க வேண்டும்? - குழந்தை பிறந்தால் எப்படி இருப்பார்?
விருச்சிகம் இன்றைய ராசிபலன் - Scorpio
நண்பர்களுக்கு புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். இருப்பினும் முன்னேற்றமான பல செயல்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
அரசு தொடர்பான வேலைகள் முடிவடையும். வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும்.
நினைத்த காரியத்தில் வெற்றி பெற புரட்டாசி மாதத்தில் இந்த எளிய பரிகாரத்தை முயற்சிக்கவும்
தனுசு இன்றைய ராசிபலன் - Sagittarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடிப்படையான நாள் இன்றைய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
காக்கைக்கு உணவு வைப்பதற்கும் தை அமாவாசைக்கும் என்ன தொடர்பு?
மகரம் இன்றைய ராசிபலன் - Capricorn
நண்பர்களுக்கு இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
மீடியா பத்திரிக்கை துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும் பெண்களுக்கு ஒரு மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டிற்கு தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள்.
கும்பம் இன்றைய ராசிபலன் - Aquarius
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும் நல்ல நாள் ஆகும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும் சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும்.
மீனம் இன்றைய ராசிபலன் - Pisces
வாகன வகையில் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள். மன நிம்மதி கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் நன்மை தருவதாக அமையும். மாணவர்களின் கல்வி மேம்படும். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். ஆதாயம் பெறுவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் காண்பீர்கள்.