மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்...
மேஷம் இன்றைய ராசிபலன் - Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மனம் நிம்மதி அடையும் அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டு. உடல்நலம் ரீதியான பயம் வந்து விலகும்.
பிரச்சனைகளை சந்திப்பதற்கு பதிலாக அவற்றை தவிர்க்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் - Taurus
நண்பர்களுக்கு தனவரவு உடன் கூடிய மகிழ்ச்சியான நாள் ஆகும். வகைகள் செலவினங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும்.
உயர் கல்வியை நோக்கி வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது கூட்டுத் தொழில் துவங்குவது போன்றவற்றை சற்று தள்ளி வைக்கலாம். இவைகளால் ஆதாயம் உண்டாகும்.
மிதுனம் இன்றைய ராசிபலன் - Gemini
நேயர்களுக்கு இன்றைய நாள் சுப பலன்களை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் மேம்பாடு வார்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
கடகம் இன்றைய ராசிபலன் - Cancer
பல புதிய வாய்ப்புகள் தென்படும் படிப்பை முடித்து வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. பொருளாதார பற்றாக்குறைகள் நீங்குவதற்கான நல்ல நாள் .
சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். வேலையாட்களால் ஒரு சில அசௌகரியங்கள் ஏற்படும் என்றாலும் அவற்றை திறம்பட சமாளிப்பீர்கள்.
சிம்மம் இன்றைய ராசிபலன் - Leo
நண்பர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். உணவு தொழில் சுற்றுலாத்துறை வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.
உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாள் ஆகும். ஒரு சிலர் கல்விக்காக வெளிநாடு செல்லும் சூழ்நிலைகள் ஏற்படலாம் ஆயினும் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோனியமாக இருக்கும்.
கன்னி இன்றைய ராசிபலன் - Virgo
கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இடமாற்றத்தை பற்றி சிந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
விசா தொடர்பான காரியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப சிந்தனை கொண்டு இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதம் ஆகும். அலைச்சல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு.
துலாம் இன்றைய ராசிபலன் - Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் யோகத்தை தரக்கூடிய நாள் ஆகும். பலருக்கு பிரயாணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பயணத்தால் வெற்றி கிடைக்கும் என்பதால் சற்று கவனமாக இருக்கவும். சோசியல் மீடியா போன்றவற்றில் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. நேரத்தில் கவனத்தை செலுத்தவும்.
குடும்பத்தில் அமைதி தவழும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். விசா தொடர்பான காரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆயில் அண்ட் கேஸ் ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவர். உத்தியோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும்.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் - Scorpio
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி கொண்டு இருந்தால் அவைகளில் வெற்றி உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய கூடிய நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான நல்ல நாள் ஆகும்.
தனுசு இன்றைய ராசிபலன் - Sagittarius
அன்பர்களுக்கு பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பதற்கிணங்க உங்களுடைய பேச்சு கவனம் தேவை. வீண் அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்கள் தங்கள் திருமணத்தைப் பற்றி பெற்றோருடன் பேச சாதகமான பதில் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் என்றாலும் படித்த பாடத்தை மீண்டும் படிப்பது புதிய சிந்தனைகளை உருவாக்கும்.
மகரம் இன்றைய ராசிபலன் - Capricorn
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் வெளிநாட்டிலிருந்து பண வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு உங்கள் எண்ணம் ஈடேறும் கல்வி நன்றாக இருக்கும். கல்வியின் புதிய வாய்ப்புகளைப் பற்றிய சிந்தனை மனதில் உதயமாகும் உடல் நலம் சீராக இருந்துவரும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் அமைதி தவழும்.
யோகத்தில் இருப்பவர்கள் இட மாற்றத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் நம்பிக்கையைப் பெற்று இருப்பீர்கள். ஆதலால் சற்று பொறுமையாக இருந்தால் உயர்வு பெறலாம். சொந்த தொழில் செய்பவர்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள்.
கும்பம் இன்றைய ராசிபலன் - Aquarius
வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் அந்த எண்ணம் நிறைவேறப் பெறுவார்கள்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் உண்டாகும். தனவரவு கிடைக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் .நிர்வாகத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெறுவீர்கள்.
மீனம் இன்றைய ராசிபலன் - Pisces
நண்பர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீக சிந்தனைகளோடு செல்லும் அருமையான நாள் ஆகும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.
மகான்களின் தரிசனத்திற்கு கோவிலுக்குச் செல்லுதல், குருமார்களின் ஆசீர்வாதம் போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் இவற்றில் வெற்றி கிடைக்கும்.