தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆடியோவை ஸ்டேட்டஸ்-ஆக வைக்கும் வசதியை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் hide online status என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, பயனாளர்கள் தங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்கள் பார்க்காத வகையில் அதை மறைத்து வைத்துக் கொள்ளலாம். தற்போது whatsapp பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.