Type Here to Get Search Results !

இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் தெரியுமா...




*ரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் முகப்பரு, அலர்ஜி, தலைவலி, மஞ்சள் காமாலை, முகத்தில் சுருக்கம், எரிச்சல், தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூட்டு வலி, இளமையில் முதுமை, முடி உதிர்தல் போன்ற நோய்கள் அல்லது நோய்க்கான உண்டாகும்.

*தண்டுக் கீரையை களைந்து அதனுடன் சிறிது மிளகு, சிறிது மஞ்சள், கொஞ்சம் தேங்காய்பால் *ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நாக்கிற்கு சுவையாகவும் இருக்கும் இரத்தமும் சுத்தமாகும்.

*நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பலவிதமான நோய்களும் குணமாகும். இது மட்டும் இல்லாமல் வெறும் நெல்லிக்காயை மட்டுமே அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.

*புதினா இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் சம அளவில் எடுத்து நன்கு கழுவி பின் இரண்டு இலைகளையும் அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அல்லது ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் இரத்தம் ஒரே மாதத்தில் தூய்மையாகும்.

*அருகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாவதோடு இரத்தமும் தூய்மையாகும்.


Top Post Ad

Below Post Ad