சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்-அப்பில் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டேதான் இருக்கிறது மெட்டா நிறுவனம்.
அந்த வகையில் தற்போது புதிய அம்சங்கள் அதில் இணையவிருக்கின்றன.
அதாவது, முகநூல், இஸ்டாகிராம் போன்றவற்றில் இருப்பது போல, சாட் பாக்ஸில், பயனாளர்கள் தங்களது ரியாக்ஷனை வெளிப்படுத்தும் எமோஜிகளை அனுப்பும் புதிய வசதி அறிமுகமாகிறது.
வாட்ஸ்-ஆப்பில் விரைவில் பயனாளர்கள் எமோஜிகளை, தோலின் நிறத்தை தேர்வு செய்து அனுப்பும் வகையில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, வாட்ஸ்-அப்பில் அனுப்பும் கோப்புகளின் அளவை அதிகரிக்கவும் முன் வந்துள்ளது. தற்போது வெறும் 100 எம்.பி. அளவுள்ள கோப்புகளை மட்டுமே அனுப்ப முடியும். இது இனி 2 ஜிகா பைட்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
ஒரே நேரத்தில் 32 பேருடன் வாய்ஸ் காலிங் செய்யும் வசதியும் வருகிறது. தற்போது வாய்ஸ் காலிங்கில் வெறும் 8 பேரை மட்டுமே சேர்க்க முடியும்.
ஒரு குழுவில் ஏதேனும் ஒரு பயனாளர், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தகவலை அனுப்பினால் அதனை குரூப் அட்மினே டெலீட் செய்யும் வசதி விரைவில் வரவிருக்கிறது. இதனால் குரூப் அட்மின்களுக்கு தொல்லை தீர்ந்தது.
ஒரு பயனாளரின் பெயரை நமது கான்டாக்ட் பட்டியலில் சேர்க்காமலேயே, அவருக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பும் வசதியும் வருகிறது.
இவையெல்லாம் வரும் வாரத்தில் அப்டேட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.