அறிமுகம் இல்லாதவர்களின். பார்வையில்..
நாம் சாதாரண மனிதர்கள்..!!
பொறாமைக்காரரின்
பார்வையில்..
நாம் அகந்தையாளர்கள்..!!
நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்.
நாம் அற்புதமானவர்கள்..!!
நேசிப்போரின் பார்வையில்..
நாம் தனிச் சிறப்பானவர்கள்..!!
காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்.
நாம் கெட்டவர்கள்..!!
சுயநலவாதிகளின்
பார்வையில்
நாம் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்..!!
சந்தர்ப்பவாதிகளின்
பார்வையில்
நாம் ஏமாளிகள்...!!
எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில்
நாம் குழப்பவாதிகள்..!!
கோழைகளின் பார்வையில்
நாம் அவசரக்குடுக்கைகள்...!!
நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்
ஒரு தனியான பார்வை உண்டு.
ஆதலால் பிறரிடம் உங்கள் பிம்பத்தை
அழகாக்கிக் காட்ட
சிரமப்படாதீர்கள்.
மற்றவர்கள் உங்களை
புரிந்து கொள்ளா
விட்டாலும்......
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.!!.
மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு..
இந்த மனிதர்களிடம்
எட்ட முடியாததை விட்டு விடுங்கள்.
அடைய வேண்டியதை
விட்டு விடாதீர்கள்.
அடுத்தவருக்காக மாறி மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே..!!
நீ நீயாக இரு.
எப்போதும் நீ நீயாகவே இரு...!!!