பறந்து பறந்து ஓய்ந்து போனாயோ
இன்னும் பத்து நிமிடம் மட்டுமாவது உழைத்திருக்கலாமே
விதி பனியாய் வந்து உம் விழிகளை மறைத்ததோ
உயர்ந்து நின்ற காட்டுமரம் உன்
கண்ணுக்கு தெரியவில்லையா அய்யகோ
எத்தனை கடல்களை தாண்டி பயணித்திருப்பாய்
எத்தனை ஆயிரம் மயில்கற்கள் பறந்திருப்பாய்
எத்தனை ஆயுதங்களையும் வீரர்களையும் சுமந்திருப்பாய்
பத்தே நிமிடம் மட்டும் உன் ஆயுள் நீண்டிருந்தால்
இன்று பல உயிர்களை இழந்திருக்க மாட்டோமே
கொடிபோர்த்தி மரியாதை செய்ய உமக்கொருவரும் இல்லையே
நாங்கள் இழந்தது பதிமூன்று உயிர்கள் அல்ல
பதினான்கு உயிர்
உன்னையும் சேர்த்து....
கண்ணீருடன்