Type Here to Get Search Results !

எத்தனை முறை பல் தேய்த்தாலும் வாய் துர்நாற்றம் வீசுவதற்கான காரணம் என்ன?



சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசுவது வழக்கம் அதற்கு காரணம் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தான். பொதுவாக பற்களில் கசடுகள் இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும்.


ஆனால் பல் துலக்கிய பிறகு கண்டிப்பாக அது நீங்கிவிடும். ஆனால் சிலருக்கு எத்தனை முறை பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் நீங்காது. அதற்கு முக்கிய காரணம் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை தான். ஒருவருக்கு வயிற்றில் புண் இருந்தால் வாய் துர்நாற்றம் மட்டுமல்ல பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

வயிற்றுப்புண் என்பது சாதாரண விஷயமல்ல. அந்த வலியானது இரவு நேரத்தில் தூக்கமின்மை, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பல வலிகளை உண்டாக்கும். இந்த வயிற்றுப் புண்ணை சரி செய்வதற்கு இயற்கை முறையில் சில வைத்தியங்களை செய்து கொள்ளலாம். வயிற்றுப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை வாரத்தில் இருமுறை உண்டு வந்தாலே வயிற்றுப்புண் நீங்கிவிடும். மது மற்றும் புகைப் பழக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சாலையோர கடைகளில் உள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது அவசியம். இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் மிகவும் பயனாக இருக்கும். தினமும் மோர் ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டால் வயிற்றுப் புண் விரைவில் நீங்கும். கேரட்டை பச்சையாக வாரத்தில் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும். வயிற்றுப்புண் என்பது ஓரிரு வாரங்களில் சரியாகும் நோய் அல்ல. கண்டிப்பாக குறைந்தது மூன்று மாதங்களாவது நாம் கவனமாக உணவு பழக்கவழக்க முறையை மேற்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவு பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெள்ளை பூசணிக்காயை அதிகாலையில் மிக்சியில் போட்டு அடித்து ஒரு டம்ளர் பருகினால் வயிறு சார்ந்த பிரச்சனை நீங்கும். ஒருவேளை வயிற்றுப்புண் அதிகமாகி மலம் கழிக்கும்போது ரத்தம் கசிந்தால் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம். வயிற்றுப்புண்ணை சரியான நேரத்தில் நாம் குணமாக்க தவறினால் அதிகப்படியான விளைவுகளை சந்திக்க நேரிடும். மக்களே மிகவும் கவனமாக இருங்கள்.



Top Post Ad

Below Post Ad