பொதுவாக பெண்கள் சிலருக்கு உதடுகளுக்கு மேல்புறமும், தாடைக்கு கீழ்புறமும் முடி வளர்வது வழக்கம்.
இதற்கு காரனம் ஆண்களின் உடலில் முடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது இது போன்ற தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்கிறது.
சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபட முடியும்.
மேலும் பக்கவிளைவுகள் இல்லலத இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம், சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் எப்படி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளிய முறையில் விரட்டலாம் என்பதை பார்ப்போம்.
இரண்டு ஸ்பூன் எலுமிச்சை மற்றும் சர்க்கரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் கலந்து சூடு படுத்துங்கள். நீர் கொதித்து வரத் தொடங்கும்போது அடுப்பை அனைத்துவிடுங்கள். பின் சூடு குறைந்ததும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். முடி உதிர்வதை நீங்களே உணர்வீர்கள்.
ஓட்ஸை மைய அரைத்து இரண்டு ஸ்பூனும், ஒரு வாழைப்பழமும் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தேன் கலந்து மூன்றையும் பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக் முடியை நீக்குவது மட்டுமல்ல முகத்திற்கு பொலிவான தோற்றம் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் முட்டை வெள்ளை, சோள மாவு, சர்க்கரை மூன்றையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய விடுங்கள். பின் அப்ளை செய்த பேக் தானாகவே உறிந்து விழும். அப்போது முற்றிலும் நீக்கிவிட்டு முகத்தைக் கழுவிவிடுங்கள். இதை வாரம் மூன்று முறை செய்து வாருங்கள். தானாக முடி உதிரும்.
ஐந்து ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை எடுத்துக்கொள்ளுகள். கடலைமாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் அதை அரைத்து எலுமிச்சை, தேன், உருளைக்கிழங்கு சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி விடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.