வீடு வாங்குவது என்பது பலரின் கனவு. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சிறுகச்சிறுக சேமித்து வைத்து ஒரு வீட்டை வாங்க வேண்டும் அல்லது வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
நில பத்திர பதிவு:
ஒரு வீடு வாங்குவதற்கு முன்பு நிலத்தின் பத்திரங்களை சரிபார்க்க வேண்டும். கட்டுமானம் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும், அந்த நிலம் வீடு மீது ஏதேனும் வழக்கு உள்ளதா என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அங்கீகாரம்:
வீடு கட்டுவதற்கான அங்கீகாரம் மற்றும் அதன் வரைபடத்தை சரிபார்க்க வேண்டும். அங்கு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு அங்கீகாரம் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பார்வையிடல்:
வீடு இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். பிரவுசர்கள் மூலம் நாம் பார்க்கும் தகவல்களை நம்பக் கூடாது. நாம் நேரில் சென்று நாம் அதனை சரி பார்க்க வேண்டும்.
வீட்டின் அமைப்பு:
வீட்டின் அளவு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சூப்பர் ஏரியா, கார்பெட் ஏரியா, அல்லது பில்ட்-அப் ஏரியா உள்ள அளவுகள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.
கூடுதல் கவனம்:
வீடு கட்டி முடிக்கப்படும் வரை சிறந்த கவனம் வேண்டும். ஒரு வீடு கட்ட இரண்டு வருடம் தேவைப்படும் பட்சத்தில் அதனை கட்டி முடிக்க 30 மாதங்கள் வரை பில்டர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அபராத விதிகள்:
டெவலப்பர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ப்ராஜெக்ட் கையகப்படுத்தாததற்காக வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. பெரும்பாலான டெவலப்பர்கள் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் வரை செலுத்த வேண்டிய எந்த தவணையிலும் தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த தேவையில்லை.
பணம் செலுத்தும் விதிகள்:
டெவலப்பர்கள் பெரும்பாலும் வீடு வாங்கும் கவர முயற்சி செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளிவிடுகின்றன. வீடு வாங்குவதற்கு முன்பு அவற்றை சரியாக பார்க்க வேண்டும்.
மறைமுக கட்டணம்:
வீடு வாங்க புக்கிங் செய்யும் பொழுது ஏஜெண்டுகள் நம்மிடம் இருந்து அதிக அளவு பணத்தை கேட்பார்கள். ஆனால் நாம் அதிக தொகையை செலுத்த தேவையில்லை. சொசைட்டி சார்ஜ், பவர் பேக்கப் சார்ஜ் ஆகியவற்றை வசூலிக்கின்றனர். இதனை சரியாகக் கவனிக்க வேண்டும்.
டெவலப்பர்கள் :
வீடு கட்டும் முன் அந்த டெவலப்பர்கள் நம் வீட்டை தரத்துடன் கட்டுபவரா நேரத்திற்கு கட்டி முடிப்பவரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கூடுதல் செலவு:
வீடு கட்டும் முன் ஒரு தொகையை பேசி பின் சிமெண்ட், இரும்பு, கம்பி விலை, உயர்வு போன்றவற்றை குறிப்பிட்டு அதிக தொகை கேட்டால் அவற்றை கொடுக்கக் கூடாது.