15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரியில் நடை பெறும் என்று கூறப்படுகிறது.
இந்த தொடரில், புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதற்கு முன் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்கள் வீரர்களில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும்.
இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ளலாம்.
ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்தால், அவர்களின் ஊதியம் முறையே ரூ. 16 கோடி, ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி என்று மொத்தம் ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும்.
மீதமுள்ள ரூ.48 கோடியை கொண்டுதான் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற விதி ஐ.பி.எல். வகுத்து உள்ளது.
தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள்.
இந்நிலையில் அணிகள், வீரர்களை தக்க வைத்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜடேஜா( ரூ .16 கோடி) , தோனி (ரூ 12 கோடி), மொயீன் அலி (ரூ .8 கோடி) ருதுராஜ் கெய்க்வாட்(ரூ .6 கோடி), ஆகியோரைத் தக்கவைத்துள்ளது.
மும்பை இண்டியன்ஸ் அணி, ரோகித் சா்மா (ரூ.16 கோடி), பும்ரா (ரூ.12 கோடி), சூா்யகுமாா் யாதவ் (ரூ.8 கோடி), கிரன் பொல்லாா்டு (ரூ.6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.
ராயல் சேலஞ்ஜா்ஸ் பெங்களூரு அணியில், விராத் கோலி (ரூ.15 கோடி), மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி) ஆகியோரை தக்கவைத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி, மயங்க் அகா்வால் (ரூ.12 கோடி), அா்ஷ்தீப் சிங் (ரூ.4 கோடி) ஆகியோரை தக்கவைத்தது.
சன்ரைசா்ஸ் ஐதராபாத் அணி, கேன் வில்லியம்சன் (ரூ.14 கோடி), அப்துல் சமத் (ரூ.4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ.4 கோடி) ஆகியோரையும் தக்க வைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் (ரூ.14 கோடி), ஜோஸ் பட்லா் (ரூ.10 கோடி), ஜெய்ஸ்வால் (ரூ.4 கோடி) ஆகியோரை தக்கவைத்தது.
கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி, ஆண்ட்ரே ரஸல் (ரூ.12 கோடி), வருண் சக்கரவா்த்தி (ரூ.8 கோடி) வெங்கடேஷ் ஐயா் (ரூ.8 கோடி), சுனில் நரைன் (ரூ.6 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது.