Type Here to Get Search Results !

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி -பிரதமர் மோடி அறிவிப்பு முழு விவரம்



*ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி- பிரதமர் மோடி

*உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசி இந்தியாவில் வர இருக்கிறது- பிரதமர் மோடி

*ஜனவரி 3-ந் தேதி முதல் 15-18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்- பிரதமர் மோடி

*நாட்டில் இதுவரை 90% மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்

*இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன - பிரதமர்

*ஒமிக்ரான் பரவி வருகிறது. நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்

*ஒமிக்ரானை கண்டு பீதியடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். 2022ஆம் ஆண்டை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கிறோம். கொரோனா இன்னும் நம்மை விட்டு போகவில்லை. தற்போது பண்டிகை காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்

12 மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது கிட்டத்தட்ட 90 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. 61 சதவீதம் மக்கள் இரண்டு தவணையும் செலுத்தி உள்ளனர். உத்தரகாண்ட், டெல்லி, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இது நமது சுகாதார கட்டமைப்பின் வலிமையை காட்டுகிறது. நமது தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையிலானது. 
கொரோனா இன்னும் நம்மை விட்டு விலகவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள். அதேசமயம் ஒமைக்ரான் தொற்றைக் கண்டு அச்சமடைய வேண்டாம். 


தடுப்பூசியின் பலன்கள் மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. ஜனவரி 3ம் தேதி முதல், 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்

Top Post Ad

Below Post Ad