◆தினமும் தண்ணீரை இளஞ்சூட்டில் குடித்துவந்தால் அவை உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை படிப்படியாக கரைக்கும். இந்த கொழுப்பு உடலில் தங்காமல் வெளியேறவும் செய்யும்.
◆சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என தினம் ஒன்றாக கொதிக்க வைத்து குடித்து வரலாம். இந்த நீரையும் வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவர வேண்டும். குறிப்பாக அசைவ உணவு எடுத்துகொள்ளும் போதும். தொடர்ந்து இந்த வெந்நீரை குடித்துவந்தால் உடலில் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு வேறுவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
◆கமலா ஆரஞ்சை தோலுரித்து கொட்டை நீக்காமல் சுளைகளை சாப்பிட்டு வர வேண்டும். இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது. அதிக அளவு வேண்டாம். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டாலே போதுமானது. நாளடைவில் பலன் தெரியும்.
◆சுத்தமான பருத்தி துணியை எடுத்து கைக்குட்டை அளவு கத்தரித்து அதன் நடுவில் பிடி அளவு கல் உப்பு சேர்த்து மூட்டை கட்டவும். இதை சுத்தமான நல்லெண்ணெயில் நனைத்து வைக்கவும். அடிகனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி பொறுக்கும் சூட்டில் இதை சூடுகாட்டி எடுத்து கட்டிகள் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம். சூடு ஆற ஆற உப்பு மூட்டையை மீண்டும் சூடாக்கி கொடுக்கலாம். அதே போன்று நல்லெண்ணெய்க்கு மாற்றாக விளக்கெண்ணெயும் பயன்படுத்தலாம்.
◆கொடிவேலி தைலத்தை இரவு நேரங்களில் படுக்கும் போது கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். ஐந்து விரல்களின் முனையை கொண்டு இலேசாக கட்டிகள் மீது தட்டி தட்டி விடவேண்டும். இரவு முழுவதும் அவை ஊறி சருமம் உறிஞ்சு கொள்வதோடு கட்டிகள் படிப்படியாக கரையக்கூடும். இவை பக்கவிளைவு இல்லாதவை என்பதால் தயக்கமில்லாமல் பயன்படுத்தலாம்.
◆கரைந்த பிறகு செய்ய வேண்டியது
கொழுப்பு கட்டிகள் கரைந்த பிறகு மீண்டும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
சாப்பிட்ட பிறகு ஒரே இடத்தில் உட்காருவதால் உணவில் இருக்கும் கொழுப்பானது உடல் திசுக்களில் சேர்ந்து மீண்டும் கொழுப்பு கட்டிகளை உண்டாக்கக்கூடும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
இயன்றளவு உடல் உழைப்பும், உடல்பயிற்சியும் மேற்கொண்டால் கரைந்த கொழுப்பு கட்டிகள் மீண்டும் வராமல் தடுக்க முடியும்.