Type Here to Get Search Results !

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க உதவும் வெந்தயம்.எப்படி பயன் படுத்துவது?

 



கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்… என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சரி… சர்க்கரைநோயை முற்றிலுமாகப் போக்க முடியுமா? முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

டைப் 1 சர்க்கரைநோய்: சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.

டைப் 2 சர்க்கரைநோய்: பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். 

நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ருசியான உணவை தேடி ஆரோக்கியமான உணவை இழந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.

நம் சமையறையில் இருக்கும் பொருட்களை கொண்டே பல நோய்களை விரட்டி அடித்து விடலாம். குறிப்பாக வெந்தயத்தில் பல நன்மைகள் உள்ளது. சரி வாங்க வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி நீரிழிவு நோயில் இருந்து வெளியே வருவது குறித்து பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு வெந்தயம் சேர்த்து அதில் வெந்நீரை ஊற்றி கிட்டத்தட்ட 10 நிமிடம் நன்றாக ஊறவைக்கவும். சுவைக்கு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை கலந்து கொண்டு வடிகட்டி சூடான தேனீராக பருகலாம்.

நன்மைகள்:-

வெந்தயத்தில் உள்ள நார் சத்துக்கள் இயற்கையாகவே உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது. பெருங்குடல் புற்றுநோய், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவையே ஈஸியாக சமாளிக்க முடியும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது 8வது மாதத்தில் இருந்து தினமும் வெந்தயம் ஊறவைத்த நீரை குடித்து வந்தால் சுக பிரசவம் நடக்கும். அதுமட்டும் இல்லாமல் இது கருப்பை சுருங்காமல் காக்கின்றது.

சில சமயங்களில் வெந்தயக்கீரையை மாவாக அரைத்து கொண்டு துணியில் மூட்டை கட்டி நெருப்பில் சூடு செய்து தோலில் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறு செய்வதால் உடல் வலி, தசை வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.

வெந்தய விதைகளை வெறும் வயிற்றில் தினமும் உட்கொள்வது மூலம் முக சுருக்கங்கள், கரும் புள்ளிகள் போன்றவையே தடுக்கலாம். வெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்...

Top Post Ad

Below Post Ad