இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பணிச்சுமை காரணமாக, டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டுமே செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் நடைபெறும் டி.20 உலகக் கோப்பைக்கு பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டதாக கோலி தெரிவித்துள்ளார்.