Type Here to Get Search Results !

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் பார்வை பாதிப்பு

ஆன்லைன் வகுப்பில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள் கிட்டப்பார்வை மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பிய்ச்சு புடுவேன்… போ… ஒழுங்கா செல்போனை எடுத்து ஆன்லைன் வகுப்பை கவனி!

பெற்றோர்கள் இருவரும் அலுவலகத்தில் இருந்தாலும் வீட்டில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில்தான் இருக்கிறார்களா? என்பதை தனி செயலி மூலம் கண்காணிக்கிறார்கள்.

அய்யய்யோ என் பிள்ளை க்கு போக முடியவில்லையே என்று கடன் வாங்கியாவது ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ள பெற்றோர்.

காலை முதல் மாலை வரை செல்போனிலேயே மூழ்கி கிடக்கும் குழந்தைகள்.

இப்படி களால் வீட்டுக்கு வீடு ஆதங்கம்தான். அதே நேரம் ஆப்லைனில் குழந்தைகள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒளிபடைத்த நம் பிள்ளைகளின் கண்கள் புண்ணாகி பாதித்து வருவது பற்றி கண் மருத்துவ நிபுணர்கள் சொல்லும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை என்பதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் தான் ஏற்படும். சிலருக்கு உடலில் ஏற்படும் வேறு கோளாறுகளாலும் ஏற்படும்.

ஆனால் இப்போது ஆன்லைன் வகுப்பில் மூழ்கி கிடக்கும் குழந்தைகள் கிட்டப்பார்வை மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

கிட்டப்பார்வை ஏற்பட்டால் தொலைவில் இருக்கும் பொருட்கள் தெரியாது. அந்த குழந்தைகள் கட்டாயம் கண்ணாடி அணிய வேண்டும்.

அகர்வால் கண் மருத்துவமனை மூத்த குழந்தைகள் நல கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் கூறும்போது, “ ஆரம்பத்தில் கிட்டப்பார்வை என்பது குறைவாகவே இருந்தது. இப்போது குழந்தைகள் மத்தியில் அதிகளவு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.

மொபைல் போன்களை அதிக நேரம் உற்றுப்பார்த்து கொண்டிருப்பது, உடல் செயல்பாடு இல்லாதது, உடலில் சூரிய ஒளி தேவையான அளவு படாதது ஆகியவை தான் இதற்கு அடிப்படை காரணம். பொதுவாக வருடத்தில் இரண்டு மூன்று பேர்தான் இந்த மாதிரி பாதிப்புகளால் வருவார்கள். ஆனால் இப்போது குறைந்தபட்சம் 10 குழந்தைகள் வருவதாக கூறுகிறார்கள்.

மொபைல் போன் அல்லது லேப்டாப் திரைகளை அதிக நேரம் பார்த்து கொண்டிருப்பதால் இந்த குறைபாடு வருகிறது. குறைந்தது 4-ல் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளிகளை திறப்பதுதான் இந்த பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் என்கிறார்கள்.

சராசரியாக ஒரு குழந்தை லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் அல்லது மொபைல் போனில் 8 முதல் 10 மணி நேரம் வரை மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர்களில் மூழ்கி கிடக்கும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் சூரிய ஒளி உடலில் படும்படி விளையாட வைக்க வேண்டும்.

உணவில் கீரை, கேரட், மீன், முட்டை போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். சிறிய திரைகளை தவிர்த்து டெஸ்க்டாப், டி.வி. திரை போன்றவற்றை பயன்படுத்த வைப்பது நல்லது என்கிறார்கள்.


Source: Maalaimalar


Top Post Ad

Below Post Ad