குழந்தைகளுக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்வதற்கான நடைமுறைகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது போடப்பட்டு வருகிறது. 2 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி சோதனை ஏற்கனவே பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2வது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கான மருத்துவ ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் பங்கேற்கும் 525 தன்னார்வலர்களின் ஆய்வு முடிவுகள் வந்த பின் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு 27 நாட்களுக்குப் பின் 2வது டோஸ் தடுப்பூசி போடப்படும்.