Type Here to Get Search Results !

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள்: அண்ணா பல்கலை. முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது


அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் குறித்த முக்கிய வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி/ மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்ததால், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் மறுதேர்வு மற்றும் ஏப்ரல்/ மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

” * தேர்வுகள் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதைப் போல 3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில் நடைபெறும்.

* வீட்டிலிருந்தே தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

* முன்னதாக மாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி/ மடிக்கணினி/ மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைய வசதியுடன் வைத்திருக்க வேண்டும்.

* மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

* ஹால் டிக்கெட்டைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்தத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.

* தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக மின்னஞ்சல்/ கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.

* தேர்வு காலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.

* வினாத்தாளைப் பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல பிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும் 2.30 முதல் 5 மணி வரை தேர்வு எழுதவும் 5.30 முதல் 6 மணி வரை விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத் தாளில் நீலம் மற்றும் கருப்பு நிற மையால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல் இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.

* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.

* தேர்வு எழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.

* தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

* விடைத்தாளை எடுத்து நூலில் கட்டி, விரைவுத் தபால், பதிவுத் தபால் அல்லது கொரியர் மூலம் அந்தந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.

* நேரடியாகக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.

* ஒவ்வொரு தாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டு எண், தேர்வின் பெயர், பதிவு எண் ஆகியவற்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.

* ஒவ்வொரு தாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம் எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக் கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம்”.

இவ்வாறு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad