Type Here to Get Search Results !

எச்சரிக்கையா இருங்க: கொரோனா பரிசோதனைக்கு போலி இணையதளம்!



கொரோனா பரிசோதனை செய்வதாக போலி இணையதளம் உருவாக்கி, சிலர் மோசடியில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உள்பட பல மாநிலங்கள் அதிகமான பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து முழு ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா தொற்று கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்ற பெயரில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இந்தக் கும்பல், போலியான இணையதளம் ஒன்றை ஆரம்பித்து, அதில் கொரோனா பரிசோதனையை வீட்டுக்கே வந்து செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் பணத்தை பெற்றவுடன் போலியான பரிசோதனை முடிவுகளை அவர்களுக்கு தெரிவித்து வருகிறது..

இந்த ஆன்லைன் கொரோனா பரிசோதனை கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. அரசு அங்கீகாரம் இல்லாத கொரானா பரிசோதனை மையங்களில் சோதனை செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

Top Post Ad

Below Post Ad