சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 27) ரயில் இயக்கத்தில்நேர இடைவெளியைமாற்றி புதிய அட்டவணையை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரையிலான சேவையில், விம்கோ நகர் - விமான நிலையம் இடையே ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரயிலும், சென்ட்ரல் - விமான நிலையம் மற்றும்சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 2 மணிநேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியதை தொடா்ந்து, தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போது, கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன்காரணமாக, பொதுமுடக்கத்தில் தளா்வுகளை அதிகரித்து தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில், மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 50 சதவீத பயணிகளுடன் சென்னை மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை (ஜூன் 20) தொடங்கியது. தொடக்கத்தில்காலை 6.30 மணி முதல் இரவு 9 மணிவரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.