நடிகை சாந்தினி அளித்த புகாரில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் முன் ஜாமீன் அளிக்க கோரி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் மணிகண்டனை தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில், பெங்களூரில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.