சமைத்து முடித்ததும் ஸ்டவ்வை சுற்றிலும் துடைக்கும் பலர் பர்னரை துடைப்பதில்லை. கழுவி அடைப்புகளை சுத்தம் செய்வதில்லை. ஸ்டவில் பர்னர்தான் தீ சீராக பற்றி எரிய காரணமாக இருக்கிறது. ஒருவேளை அதில் அடைப்பு இருப்பின் தீ சீராக இருக்காது. சமையலும் சட்டென நடக்காது. சில நேரங்களில் இந்த பர்னர் அடைப்பு தீ விபத்துகளை கூட நிகழ்த்தலாம். எனவே ஸ்டவ்வை சுத்தம் செய்வது போல் அவ்வபோது பர்னரையும் கழற்றி சுத்தம் செய்யுங்கள். அதை எப்படி பளபளவென புதிது போல் சுத்தம் செய்து பராமரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு புளி
அகலமான கிண்ணம்
தண்ணீர்
செய்முறை :
பகல் முழுவதும் புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
தூங்கும் முன் புளியை நன்கு கரைத்துக்கொண்டு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அந்த தண்ணீரில் பர்னர்களை மூழ்கும்படி ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
அடியில் மீந்துபோன ஊறுகாய் மசாலாவை வைத்து இப்படி ஒரு விஷயம் செய்யலாமா..? இது தெரியாம போச்சே..!
இரவு முழுவதும் ஊற விடுங்கள்.
மறுநாள் எழுந்ததும் அதை எடுத்துப்பார்த்தாலே சற்று பளபளப்பாகத் தெரியும். பின் கம்பி நார் கொண்டு சபீனா அல்லது சோப்பில் தொட்டு நன்குத் தேய்க்க மீதம் இருக்கும் கருமையும் நீங்கி புதிதுபோல் ஜொலிக்கும்.
பின் அதை வெயில் அல்லது காற்று படும்படி நன்கு காய வைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக பர்னர் கிளீனிங் ஸ்டிக் அல்லது மெல்லிய குச்சி கொண்டு ஓட்டைகளில் அடைப்புகளில்லாமல் ஒவ்வொரு ஓட்டையால குச்சியை குத்தி எடுங்கள். இப்படி செய்வதால் பர்னர் தீ சீராக இருக்கும்.