‘இன்றும், நாளையும், 15 மாவட்டங்களில், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும்’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக மதுரையில், 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.திருத்தணி, 41; சென்னை விமான நிலையம், 40; சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், கரூர் பரமத்தி, நாகை, புதுச்சேரி, 39; வேலுார், துாத்துக்குடி, தர்மபுரி, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது. மற்ற இடங்களில், 38 டிகிரி செல்ஷியசுக்கு குறைவாக வெப்பநிலை இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.