தடுப்பூசி குறித்த எந்த வழிகாட்டு நெறிமுறைகளிலும் CRP பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை. ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் (Anticoagulant) மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதய நோயாளிகள் என்றால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். இதய நோயாளிகளுக்கு அதுவும் கட்டாயமல்ல. குழப்பம் உள்ளவர்கள் மட்டும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி
இப்போது பரவிக்கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் முதல் அலையின்போது பரவிய வைரஸைவிட 60 சதவிகிதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. அதனால்தான் கொத்துக்கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் அரிதாகத்தான் வீட்டிலுள்ள மற்றவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது. ஆனால் இப்போது ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்திலுள்ள அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்ற பாதுகாப்புக் கவசத்தை அனைவரும் போட்டுக்கொள்வது நல்லது” என்கிறார்.
இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள சூழலில் தடுப்பூசியைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதும், மருத்துவ அறிவியலுக்குப் பொருந்தாத விஷயங்களைப் பரப்புவதும் பலரைத் தவறான திசைக்குத் திருப்பும். குறைந்தபட்சம் இதுபோன்று பரவும் தகவல்களை உறுதிசெய்யாமல் அடுத்தவருக்கு ஃபார்வேர்டு செய்வதையாவது தவிர்க்கலாமே!
நன்றி: விகடன்