கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.
அதன்படி, சென்னையில் மாலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயா்ந்து, ரூ.35,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.43 உயா்ந்து, ரூ.4,495 ஆக உள்ளது.
வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.74.20 ஆகவும்,கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து ரூ.74,200 ஆகவும் விற்கப்படுகிறது.