தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிமை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை இன்று காலை சாரல் மழை பெய்த நிலையில், ஆங்காங்கே பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது