அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய ஊழல்தடுப்பு பிரிவை ஏற்படுத்த ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அனைத்து பத்தரப்பதிவு அலுவலகங்களிலும் ஊழல் தடுப்பு பிரிவை அமைக்க நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். ஊழல் தடுப்பு பிரிவு அளிக்கும் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. விழுப்புரம் அருகே ஒரு ஏக்கர் நிலத்தின் விற்பனை தொகையை மாற்றியதை எதிர்த்து ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதால் அரசின் கொள்கை, நலத்திட்டம் மக்களை சென்றடைகிறதா என சந்தேகம் உள்ளது என கேள்வி எழுப்பியது. எனவே அதிகாரிகளின் அலட்சியத்தால் அடித்தட்டு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் சென்றடையவில்லை என கூறுப்பட்டுள்ளது. மேலும் அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்தி உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் அரசு அலுவலகங்களிலும் அந்த அலுவலகத்தின் பணி, ஒவ்வொரு சேவைக்கும் எத்தனை நாள்கள் ஆகும் என்பது பற்றிய அறிவிப்புப் பலகை வைத்திருக்க வேண்டும். ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும் லஞ்சம் தொடர்பான புகார் எண், முகவரி இடம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசு ஊழியர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.