புதிய விதிகள்படி வங்கிகள் வாடிக்கையாளரின் பணத்தை தானியங்கி முறையில் மாற்றம் செய்வதாக இருந்தால் 24 மணி நேரத்துக்கு முன்பு வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இப்போது பெரும்பாலான பணபரிமாற்றங்கள் ஆன்லைனிலேயே எளிதாக செய்யப்படுகின்றன.
ஆனால் இதில் ஏமாற்று வேலைகள் அதிகமாக நடக்கின்றன. நமது கணக்கை பேங்கிங் செய்து அதில் இருந்து பணம் எடுப்பது, குறிப்பிட்ட தவணைக்கு நமது அனுமதி இல்லாமலேயே நிறுவனங்கள் பணத்தை எடுத்துக் கொள்வது போன்றவை நடக்கின்றன.
இதை கட்டுப்படுத்துவதற்காக மத்திய ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இது நாளை (1-ந்தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
புதிய விதிகள்படி வங்கிகள் வாடிக்கையாளரின் பணத்தை தானியங்கி முறையில் மாற்றம் செய்வதாக இருந்தால் 24 மணி நேரத்துக்கு முன்பு வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர் அனுமதி கொடுத்த பிறகே பணபரிமாற்றம் நடக்க வேண்டும்.
தானியங்கி முறையில் டெபிட் பண பரிமாற்றம் செய்வது, தவணை தொகை செலுத்துவது போன்றவற்றை அனுமதி பெற்றே மாற்ற வேண்டும்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது தொடர்பாக நிரந்தர அறிவிப்புகளை வழங்க வேண்டும்.
ரூ. 5 ஆயிரத்துக்கு தானியங்கி டெபிட் பணபரிமாற்றம் செய்வதாக இருந்தால் வாடிக்கையாளருக்கு ஓ.டி.பி. (ஒரு முறை பாஸ்வேர்டு) அனுப்ப வேண்டும்.
இதுபோன்ற நடைமுறைகள் நாளை முதல் அமல்படுத்தப்பட இருக்கின்றன.
இதன் காரணமாக ஆன்லைன் பணபரிமாற்றம் மோசடிகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.