Type Here to Get Search Results !

அரசியல் ஏலம் - கிராத்தூரான் கவிதை

அரசியல் ஏலம்

உதவுகின்ற மனப்பான்மை உதிரியும் இன்றி
ஊராரை ஏய்ப்பவர்க்கு எதிரியும் நண்பன்
தேர்தல் வரும்வரைச் சிதறியே நின்று
பணத்துக்காய்த் தன்னையே விற்கின்றான் தொண்டன்.

தன்மானம் என்னென்று தெரியாத தலைவர்கள்
தவறாது காட்டுகின்றார் விதவிதக் கோலம்
தன்னையே பெரிதாகப் பறைசாற்ற நினைப்பவர்
எடுக்கின்றார் அவர்களை எளிதாக ஏலம்.

உழைக்காமல் பிழைக்கவும் உறவுகளை வளர்க்கவும்
உதவியாய்ப் பலருக்கும் இருக்கிறது அரசியல்
சுயநலப் பேய்களின் சொகுசான வாழ்க்கைக்கு
உறுதுணை என்பதே இக்காலப் பொதுநலன்.

கிராத்தூரான்

Top Post Ad

Below Post Ad