28-2-2021 அன்று திருப்பூர் மாவட்டம், எலுகாம் வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1969-70களில் கல்வி பயின்ற மாணவ மாணவிகளின் சந்திப்பு நடந்தது.
பள்ளித் தலைமையாசிரியர் தலைமையேற்க மற்ற ஆசிரிய ஆசிரியைகளும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் தங்களின் பழைய மாணவப் பருவ நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் உணர்ச்சி ததும்ப பரிமாறிக்கொண்டு பேசினார்கள்.
சக மாணவர்களில் நான்கு பேர் காலமான துயர நினைவுகளை எல்லோரும் மனத் துயரத்துடன் நினைவு கூர்ந்த விதம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
பழைய மாணவ, மாணவிகள் சார்பில் பள்ளிக்கு ஒரு பள்ளி பதிவேடுகள் பராமரிப்பு பெட்டகம் பீரோ அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு மாலை வரை நடைபெற்று பின்பு பிரியா விடை பெற்றனர்.
தகவல்:
அ.பாலசுந்தரம்
சகானா மளிகை
பிசப்காலேஜ்ரோடு
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம்.