Type Here to Get Search Results !

வங்க கடலிலும், அரபிக்கடலிலும் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்: சென்னை வானிலை மையம்



வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடுமென சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் உருவாகக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதே போன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென்று கூறப்பட்டுள்ளது. சென்னை நகரை பொறுத்த வரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் வருகிற 31 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Top Post Ad

Below Post Ad