Type Here to Get Search Results !

என்னையும் புதைப்பேன் - சுகந்தீனா கவிதை

என்னையும் புதைப்பேன்

நமக்கு பிடித்த
ஒருவருக்காக
எதை வேண்டினாலும்
விட்டுத்தரலாம்

பிடித்தவரை
விட்டுத்தந்து
விடாதீர்கள்
என்பார்கள்

உண்மையான
அன்பென்பது
அதுவல்ல

அவருக்காக
அவரின் நலனுக்காக
அவரின் கௌரவம்
குன்றி விடாமலிருக்க
அவரின்
உறவுகளிடமிருந்து
பிரிந்து விடாமலிருக்க

அவரை
விட்டுத் தருவதே
சிறப்பென்றால்

அவருக்காக...
அவருக்காக...
நிஜமான அன்பு
அதையும் செய்ய
தயங்குவதே இல்லை

தனதன்பை
தனக்குள்ளே
புதைத்து
தாராளமாய்
விட்டுத்தர
உண்மை அன்பை
சுமந்தவர்களால்
மட்டுமே சாத்தியம்

அன்பை
உண்மையாக
உணர்ந்தவர்களால்
மட்டுமே இந்த
வரிகளையும்
உணர முடியும்

கவிதாயினி
சுகந்தீனா

Top Post Ad

Below Post Ad