இரண்டு தவணையாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் தான் முழு பயன் கிடைக்கும் என்று சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜன் கூறினார்.
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படக்காரணம் என்ன என்பது குறித்து சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
* கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட உடனே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாது.
* எதிர்ப்பு சக்தி உருவாகக்கூடிய இடைப்பட்ட காலகட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவருக்கு சாதாரண காய்ச்சலாக கொரோனா வந்து போகும்.
* கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு 100% தொற்று வராது என சொல்ல முடியாது.
* இரண்டு தவணையாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் தான் முழு பயன் கிடைக்கும்.
* கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவுடன் வரும் காய்ச்சல் என்பது சாதாரணமான ஒன்று.
* தடுப்பூசி போட்டு கொண்டவுடன் 72 மணி நேரத்திற்கு மட்டும் மது அருந்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Source Maalai Malar