தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட ஆசியர்கள் 5 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆசிரியைகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
ஏற்கனவே தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.