சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்றத்தாழ்வு இருந்து வருவதால் பவுன் ரூ. 34 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் ரூ. 34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியும் வந்தது.
கடந்த 11-ந் தேதி தங்கம் பவுன் ரூ. 34 ஆயிரத்தை தொட்டது. மறுநாள் மட்டும் விலை குறைந்தது. அதன்பின் உயர்ந்து கொண்டே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 72 அதிகரித்து ரூ. 33 ஆயிரத்து 992-க்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் மீண்டும் ரூ. 34 ஆயிரத்தை தொட்டது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ. 34 ஆயிரத்துக்கு விற்றது. ஒரு கிராம் ரூ 4 ஆயிரத்து 250 ஆக உள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ. 71 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.80 ஆகவும் உள்ளது.