Type Here to Get Search Results !

காவலர் உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


 மார்ச் 8ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2ம் நிலை காவலர், ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீடு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளில் காலியாகவுள்ள 10,906 + 72 (Bl) காலிப்பணியிடங்களை பொதுத் தேர்வு மூலமாக நிரப்பிடுவதற்கான விளம்பரம் 17.09.2020 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. இதில் எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது.10906 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் கொரோனா காலத்திலும் ஆர்வமாக எழுதி உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 10906. துறை வாரியான காலிப்பணியிடங்கள் விவரம் வருமாறு: காவல்துறை: இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) 3784 ( இதில் ஆண்கள் 685, பெண்கள் மற்றும் திருநங்ககைள் 3099), இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6545 (ஆண்கள் மட்டுமே), சிறைக் காவலர் மொத்தம் 119 பணியிடங்கள், இதில் ஆண்கள் 112, பெண்கள் மற்றும் திருநங்கைகள் 7.தீயணைப்பாளர் 456 (ஆண்கள் மட்டும்). இது தவிர 72 பின்னடைவு காலிப்பணியிடங்கள் (ஆயுதப்படை 62 பெண்கள்) மற்றும் சிறைத்துறை – 10 (பெண்கள்). இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10,906 காவலர் பணியிடங்களுக்கும் ஊதிய விகிதம் ரூ.18200-52900 ஆகும்.

Top Post Ad

Below Post Ad